


| LIVE BROADCAST EVERY SATURDAY 8.30 SL TIME |
| வித்ருத் தொழுகையில் 'குனூத்' ஓதுதல் அன்சார் (தப்லீகி) வித்ருத் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக ஹசன் (றழி) அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஒரு ஹதீதை ஆதாரமாகக் கொண்டு பலரும் வித்ருத் தொழுகையில் குனூத் ஓதிவருகின்றனர். இந்த ஹதீதை பல இமாம்கள் ஆதாரமானது எனக் கூறினாலும் இமாம் இப்னு ஹுஸைமா , இமாம் இப்னு ஹிப்பான் போன்றவர்கள் ஆதாரமானதாகக் கருதவில்லை. இந்த ஹதீதை நாம் ஆய்வு செய்த போது எமது ஆய்விலும் வித்ரில் குனூத் ஓதுவது தொடர்பான செய்தி ஆதாரமற்றதாகவே தென்பட்டது. எனவே எமது ஆய்வை சுருக்கமாக மக்களுக்குத் தெரியப்படுத்தும் முகமாக எமது கருத்தைப் பேசி வீசீடிகளை வெளியிட்டோம். விரும்பிய சகோதரர்கள் அவற்றைக் கேட்பதன் மூலம் எமது கருத்தைத் தெரிந்து கொள்ளலாம். இதே வேளை எமது கருத்தைச் செவியுற்ற சில மௌலவிமார்கள் அதில் சில தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி இருப்பதை அறிகின்றோம். (நன்நோக்கமுள்ள சகோதரர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக) More read |
| ஹதீஸ் கலை - குழப்பமும் விளக்கமும் குழப்பம் ஓர் ஹதீதை ழயீபானது என்று கூறினால் அதன் விளக்கம் அதன் அறிவிப்பாளர் தொடரில் ஓர் பலஹீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார் என்பதே தவிர அந்த ஹதீஸ் ஆதாரமானதுதான், அது ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதுதான், அந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதுதான் என்றே விளங்க வேண்டும் என சில மௌலவிமார்கள் கூறுவதை அவதானிக்கின்றோம். விளக்கம் இவர்களின் இந்த கூற்று மிகவும் தவறானதாகும், எந்த ஓர் ஹதீஸ் கலை அறிஞரும் இவ்வாறு கூறவுமில்லை. ஹதீஸ் கலையைப் பற்றி அறியாதவர்களே இவ்வாறு கூறுவார்கள். அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான் : More read |